விபத்தில்லா தமிழகத்தை நிச்சயம் அமைப்போம்

இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க ‘இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார்

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதே ‘இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகும். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறிவயதாவது :

உடனடியாக உதவ கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘இன்னுயிர் காப்போம்’. நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ,சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.

சாலை விபத்துக்களில் பெரும்பாலும் இளம் வயதினர் உயிரிழக்கின்றனர். சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது .சாலை விபத்துக்களில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எந்த மாநிலம் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சிகிச்சை அளிக்கப்படும் ,48 மணிநேரத்திற்கு பிறகும் சிகிச்சை தேவைப்பட்டால் முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.
விபத்து ஏற்படக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கம் .இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.

சாலைகளில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் .விபத்தில்லா தமிழகத்தை நிச்சயம் அமைப்போம் என்றார்.

Related posts