கலாநிதி லொனா தேவராஜனின் வரலாற்று ஆய்வு

கலாநிதி லொனா தேவராஜனின் ‘கெண்டியன் கிங்டம்’ என்ற வரலாற்று ஆய்வு நூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் நாளை (10) கண்டியில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து இத்திரைப்படமானது எதிர்காலத்தில் 25 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

‘பவதரன’ என்ற இப்படத்தில் இலங்கையின் முன்னணி நடிகர்ளான மாலினி பொன்சேக்கா , பிரியந்த மெண்டிஸ், மகேந்திர பெரேரா, ரொசான் பிலபிட்டிய போன்ற பிரபலங்கள் உட்பட இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படமானது கண்டி கே.சி.சி.நவீன திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் கி.பி1747 -1760 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்வங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

Related posts