இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம்

இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரமொன்று வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை கரையொதுங்கியது.
தமிழகத்தின் ஆலம்பத்தூர், சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் (47) என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரமே இவ்வாறு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வடபகுதிக் கடலில் ஆறு நாட்களிற்குள் இனந்தெரியாத ஆறு சடலங்கள் கரையொதுங்கின. கடந்த மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும், கடந்த வியாழக்கிழமை (02) பருத்தித்துறை சாக்கோட்டை மற்றும் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியிலுமாக இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
குறித்த 06 சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

——–

2021 டிசம்பர் 03ஆந் திகதி பாகிஸ்தானில் சியல்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவதனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) இலங்கைக்கு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் சடலம் நாளை கொண்டுவரப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது நெருங்கிய உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, வெளிநாட்டு அமைச்சு இந்நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றது.

தேவேளை, பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.

Related posts