‘இந்தியன் 2′ படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கம்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட மேலும் பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் படப்பிடிப்பு அரங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. ஷங்கரும் தெலுங்கு படத்தை இயக்க போய்விட்டார். இதனால் ஷங்கருக்கும், பட நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டு பிரச்சினை கோர்ட்டுக்கு சென்றது. பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பம் காரணமாக ஏற்கனவே நாகார்ஜுனா படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். வேறு சில படங்களில் இருந்தும் அவர் விலகியுள்ளார். ‘இந்தியன் 2′ படத்தில் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் முடிக்கவில்லை. எனவே ‘இந்தியன் 2′ படத்திலிருந்து காஜல் அகர்வாலை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக வேறொரு நாயகியை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts