இலங்கையின் சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வட மாகாணம் போன்று மாத்தறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

—–

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2 ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து மாயமானார்.

மாயமான மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

—-

Related posts