அதிக திரையரங்குகளில் வெளியாகிறது அண்ணாத்த …!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாளை தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், அண்ணாத்த திரைப்படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் 572 ,ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இது ஒரு தமிழ் திரைப்படத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடு 1100+ திரையரங்குகள் எண்ணிக்கை ஆகும்.

Related posts