இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட மாட்டேன்

நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைஅனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில் நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார் இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில்…

விசாரணைகள் நேர்மையான முறையில் இடம்பெறுவது அவசியம்

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உட்பட்டு, கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது. ஈடு செய்ய முடியாத இவ் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். இந்த துர் செயலை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவிததலையீடுகளும்…

படப்பிடிப்பில் விஷால் காயம்

வில்லனுடன் விஷால் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது இரும்புத்தடுப்பில் விழுந்ததில் விஷால் காயம் அடைந்தார். விஷால் தனது 31-வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்குகிறார். நாயகியாக ஹயாத்தி மற்றும் யோகிபாபு, ரவீனா ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது வில்லனுடன் விஷால் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. விஷாலை வில்லன் தூக்கி எறிவதுபோல் காட்சியை எடுத்தனர். அப்போது விஷால் ஒரு இரும்புத்தடுப்பில் விழுந்தார். இதில் அவரது முதுகில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக பிசியோதெரபி மருத்துவர் வரவழைக்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விஷால் கைவசம் எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய மேலும் 2 படங்கள் உள்ளன. எனிமி படப்பிடிப்பு…

ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உண்டா?

ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உண்டா? மும்பை இணை கமிஷனர் மிலிந்த் பரம்பே இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களையும், மாடல் அழகிகளையும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து அவற்றை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி இருப்பது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஆபாச படத்துக்கு ரூ.5 லட்சம் வரை அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ராஜ்குந்த்ராவை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கு தெரியாமலேயே ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்தாரா என்று போலீசார்…

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடு

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ----- 6 புதிய படங்களில் நடிக்க நயன்தாரா தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் பார்வையற்றவராக வருகிறார்.…

ஷார்ட்ஸ் அணிந்து விளையாடிய பெண்கள் அணிக்கு அபராதம்

பல்கேரியாவில் ஐரோப்பிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நார்வே பெண்கள் அணி பிகினி கீழாடைக்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து விளையாடினர். இதற்காக நார்வேயின் பெண்கள் கடற்கரை கைப்பந்து அணிக்கு 1,500 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.13.12 லட்சம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு நார்வே கைப்பந்து கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. "நாங்கள் உங்களுக்கு பின்னால் நின்று உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். ஆடைகளுக்கான விதிகளை மாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், இதனால் வீரர்கள் அவர்கள் வசதியாக இருக்கும் ஆடைகளில் விளையாட முடியும், ”என்று அது மேலும் கூறி உள்ளது. அந்த நாட்டின் விளையாட்டு துறை மந்திரி ஆபிட் ராஜா இது “முற்றிலும் அபத்தமானது” என்று கூறி உள்ளார்.…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் திருத்தம் செய்யலாம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் (20) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆணைக்குழு இணங்கவில்லை என அந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை ஆராய்ந்து, நாட்டிலுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் 09, 11 மற்றும் 13 ஆவது சரத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. சிறந்த ஜனநாயக ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காக 03 பரிந்துரைகளையும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 09 ஆவது சரத்தில் காணப்படும் தடுப்புக் காவல் உத்தரவை அமுல்படுத்தும் போது, குறைந்தபட்டசம் மூன்று மாதம் அல்லது அதற்கு மேல்…