தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த்சிங் வாழ்க்கை படம் ரிலீசுக்கு தடை

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த வருடம் ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது.

கிரிகெட் வீரர் தோனி வாழ்க்கை கதையான ‘எம்.எஸ்.தோனி த அன்ட்டோல்டு ஸ்டோரி‘ படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் வாழ்க்கையை “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் படமாக்கினர். இதில் சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், காதலி ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லாவும் நடித்தனர். திலீப் குலாட்டி இயக்கினார்.

இந்த படம் வருகிற 11-ந்தேதி திரைக்கு வர இருந்த நிலையில் சுஷாந்த் சிங் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், படத்துக்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related posts