உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 9

இலங்கைத் தமிழர்களும் சிலுவை மரணமும். போதகர். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்கா பிரார்த்திப்போம். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, ப10லோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலேசியர் 1:20. தமிழர்களாகிய நாம் அனைவரும் இன்றைய இந்த நற்சிந்தனையை நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். இலங்கையில் இரு இனங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரிவினை என்னவொன்று ஆராய்ந்தும், அதனை தீர்க்கக்கூடிய நிலைமைகளும் செயற்பாடுகளும் எவ்வளவு தூரம் தாமதிக்கப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம். மனிதர்கள் ஆகிய நாம் பகைமைகளை மறந்து மனித நேயத்தை வெளிப்படுத்தி அமைதியை உருவாக்க முடியவில்லை. அதன் விளைவை தமிழ்ச் சமூகம் நன்கு அனுபவிக்கிறது. ஆனால், பாவம் செய்து தேவ மகிமையை இழந்து, தேவனுடன் உள்ள தொடர்பை இழந்து, தேனுக்கு எதிராளியாகிய எம்மை இயேசு தமது இரத்தத்தினால்…

‘த்ரிஷ்யம் 3’ கதைக்காகக் குவிந்த மெயில்கள்..

'த்ரிஷ்யம் 3' கதைக்காகக் குவிந்த மெயில்கள் தொடர்பாக ஜீத்து ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம் 2' படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'த்ரிஷ்யம் 3' தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இ-மெயில் முகவரிக்கு 'த்ரிஷ்யம் 3' கதை தொடர்பாக தொடர்ச்சியாக இ-மெயில்கள் குவிந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: "நான் 'த்ரிஷ்யம் 3' படத்துக்கான கதையைத் தேடி வருவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் எனது மின்னஞ்சலுடன் ஒரு புரளி உலவி வருகிறது.…

யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

தியேட்டர்களுக்கு பதிலாக புதிய படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது. சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. அடுத்து யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தையும் ஓ.டி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. மண்டேலா படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ஏற்கனவே எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வருகிறது. தற்போது மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியானது.

கொரோனாவில் இருந்து மீள ரகுல்பிரீத் சிங்குக்கு உதவிய யோகா

கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு. “சினிமாவில் என்னுடன்தான் எனக்கு போட்டி. இதற்கு முன்பு நடித்த படத்துக்கும், இப்போது நடிக்கும் படத்துக்கும் நடிப்பு ரீதியாக ஒருபடி மேல் ஏறி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் எப்போதும் இருக்கும். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு அரங்குக்கு செல்ல பயந்தேன். படப்பிடிப்பில் எனக்கும் கொரோனா வந்தது. நான் பொதுவாக உணவிலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பதால் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் தனிமைப்படுத்தலில் இருந்தேன். யோகா பிராணயாம மூச்சு பயிற்சிகள் செய்தேன். இதனால் 12 நாட்களில் குணமாகி விட்டேன். கொரோனாவில் இருந்து குணமான பிறகு உடற்பயிற்சி செய்யும்போது உடல் வலி இருந்தது. கொரோனாவில்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி…

9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய 24 வயது தாய் கைது

யாழ்ப்பாணம், நாவலடி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன், அப்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார். அவரது கணவர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில், தனது தாய் , சகோதரர்களுடன் குறித்த பெண் வசித்து வருகின்றார். குறித்த பெண் நேற்றையதினம் (01) திங்கட்கிழமை தனது 9 மாத குழந்தையை தடி ஒன்றினால் அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனை அவரது சகோதரன் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து ஊடகவியலாளர்கள் சிலரினால் குறித்த சம்பவம் குறித்து , நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் ,…