கங்கணாவுக்கு நஷ்ட ஈடு வழங்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

கங்கணாவின் பங்களா இடிப்பு வழக்கில் மும்பை மாநகராட்சியை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கங்கணாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் திரையுலகத்தினரை நடிகை கங்கணா வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மேலும், மும்பை நகரம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்றும் விமர்சித்தார். இதனால் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசுக்கும், கங்கணாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கணாவின் பங்களா சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறி அதன் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதை எதிர்த்து ரூ.2 கோடி இழப்பீடு அளிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கணா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மாநகராட்சியின்…

மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்ட வாஜித் கானின் மனைவி

மறைந்த இசையமைப்பாளர் வாஜித் கானின் மனைவி கமல்ருக் கான், தான் மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதற்கு நடிகை கங்கணா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் வாஜி கான் கடந்த ஜூன் 1ஆம் தேதி காலமானார். அவரது மனைவி கமல்ருக் கான் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கலப்புத் திருமணத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் என்ன என்பதையும், தன்னை மதம் மாற்ற வாஜித் கானின் குடும்பத்தினர் எப்படியெல்லாம் அச்சுறுத்தினர் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். இதனால் தனக்கும் தனது கணவருக்குமான பந்தத்திலும் பெரிய பாதிப்பு இருந்ததாக கமல்ருக் குறிப்பிட்டுள்ளார். "எனது குழந்தைகளின் உரிமைகளுக்காகவும், வாஜித் கானின் குடும்பத்தினர் அபகரித்துள்ள, என் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய சொத்துக்காகவும் நான் போராடி நிற்கிறேன். இதெல்லாமே நான் இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை…

ஒரு சண்டைக்காட்சிக்கு 50 நாட்கள்

'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்காக 50 நாட்களில் பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளது படக்குழு. 'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' வெளியாகவுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இரவில் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். எந்த அளவுக்கு குளிர் இருக்கிறது என்பதற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. தற்போது, 50 நாட்கள் இரவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை…

சூர்யாவுடன் நடிக்க பயந்த அபர்ணா

சூரரை போற்று படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான அபர்ணா பாலமுரளி அளித்துள்ள பேட்டி வருமாறு. “நான் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறேன். சூர்யா படத்துக்கு நடிகை தேர்வு நடப்பது தெரிந்து அங்கு போனேன். நடிப்புக்கு பெயர்போன சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டம் என்று கருதினேன். வாய்ப்பு கிடைத்த தகவல் வந்ததும் ஆகாயத்திலேயே பறக்க ஆரம்பித்தேன். சீனியர் நடிகர் சூர்யா. எனது பெயர் கூட யாருக்கும் தெரிந்து இருக்காது. நான் புதுப்பெண். என்னை அவர் ஜோடியாக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். முதலில் அவருடன் நடிக்க மிகவும் பயந்தேன். ஆனால் பயிற்சியில் கதையை இருவரும் சேர்ந்து படித்தோம். எனக்கு மிகவும் உதவி செய்தார். அவரது ஒத்துழைப்பை என்றும் மறக்க முடியாது. சூர்யாவின் பொறுமையை பார்த்தால் எல்லோரும் அதிசயிப்பார்கள். சக நடிகர்களை ஊக்குவிப்பார். படத்தில்…

அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு

கடந்த 2017-ம் ஆண்டு ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்று கூறி கால் நூற்றாண்டு கால ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விடை தந்தார், நடிகர் ரஜினிகாந்த். ‘சட்டமன்ற தேர்தலே தனது பிரதான இலக்கு’, ‘எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் தரமுடியும்’, என்றும் கூறி அரசியல் களத்தில் தனது முத்திரையை பதிக்க தொடங்கினார், ரஜினிகாந்த். இதையடுத்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி எப்போது தொடங்கும்? என அவரது ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். இந்தநிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 38 பேருக்கும் சென்னை வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். பரபரப்பான அரசியல் சூழலில் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக…

மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன?

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து…