சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் – பாரதிராஜா

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்கவுள்ளனர். 'கென்னடி கிளப்' படத்துக்குப் பிறகு, அடுத்து இயக்கவுள்ள படத்துக்குக் கதை எழுதி வந்தார் இயக்குநர் சுசீந்திரன். சில மாதங்களுக்கு முன்பு காலையில் நடைப்பயிற்சி சென்றபோது, சிறுவிபத்தில் சிக்கினார். அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் இருக்கிறார். அப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே புதிதாகக் கதையொன்றை எழுதி முடித்துள்ளார். அந்தப் படத்தைக் கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் சுசீந்திரன் தொடங்குவார் எனத் தெரிகிறது. அந்தக் கதையில் ஜெய் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். முன்னதாக, சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் பாரதிராஜா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜெய் - பாரதிராஜா ஆகியோருடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு…

பிரியங்கா சோப்ரா 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

நடிகை பிரியங்கா சோப்ரா, அமேசான் நிறுவனத்துடன் 2 வருட ஒப்பந்தம் போட்டுள்ளார். பல மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஒப்பந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பிரியங்கா, "இந்தச் செய்தியை உங்களிடம் பகிர்வதில் மிகுந்த உற்சாகமும், பெருமையும் அடைகிறேன். எதிர்நோக்கியுள்ளேன். கைவசம் நிறைய பணிகள் உள்ளன. அற்புதமான பார்ட்னர்களாக இருக்கும் ஜெனிஃபார் சால்கே உள்ளிட்ட அமேசான் அணியினருக்குப் பெரிய நன்றி. திறமையும், நல்ல படைப்பும் எந்த எல்லைக்கும் உட்படாதவை என்ற எனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2015-ம் வருடம், பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பிரியங்கா, உலகம் முழுவதிலிருமிருந்து அற்புதத் திறமைகளை வைத்து, மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்குவதே தன் நோக்கம் என்று கூறியுள்ளார். இதுதான் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ஜீவன் என்றும், அமேசானுடனான அடுத்த…

‘பிகில்’ சாதனையை முறியடிக்க சில காலம் எடுக்கும்

'பிகில்' படத்தின் சாதனையை முறியடித்துப் புதிய சாதனையைப் படைக்க சில காலம் எடுக்கும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக 'பிகில்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு 'பிகில்'…

தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினார். மேலும் காரைக்காலில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- சாத்தான்குளம் சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்று, மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் அரசு பார்த்துக்…

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு – சஜித் யாழில் உறுதி

ஒருமித்த நாட்டிற்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் தாண்டி அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என சஜித் பிரேமதாச யாழில் உறுதியளித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (02.07.2020) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கூறுகையில், நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன். அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன். கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையில் திட்டத்தை உருவாக்குவேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 ஆம் அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்-

புலம்பெயர் மக்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவோம்

வடக்கிலே அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் பொருட்டு புலம்பெயர் நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறினார். அங்கிருந்து வரும் முதலீட்டாளர்கள் வடக்கு பகுதிக்குச் செல்லாது கொழும்பிலேயே தங்கி விடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார். கடந்த 5 வருட காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் வடக்கில் எந்தவொரு அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் அதே நிலைமை தான் என்று கூறிய பிரதமர், இதற்குக் காரணம் முன்னைய அரசும் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தான் என்றும் குற்றம் சாட்டினார். நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.நேற்றுக் காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர், அக் கலந்துரையாடலிலேயே…