200 ஷேர்கள் விற்றுத் தீர்ந்தன; தாணு கேட்ட கேள்வி

200 ஷேர்கள் விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், தாணு கேட்ட கேள்வி குறித்தும் பேசியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம் தமிழ்த் திரையுலகில் சதவீத அடிப்படையில் சம்பளம் கொடுத்து, புதிதாக ஒரு படம் தொடங்கப்படவுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சத்யராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்தின் முதலீடு 2 கோடி ரூபாய் தான். இந்த 2 கோடி ரூபாயுமே 200 ஷேர்களாக பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது கூட்டுத் தயாரிப்பாக இந்தப் படத்தை திட்டமிட்டார்கள். இதனை திருப்பூர் சுப்பிரமணியம் - பிரமிட் நடராஜன் - ஆர்.பி.செளத்ரி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில…

இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். லாக்டவுன் தொடங்கியதிலிருந்து அதில் 75 லட்சம் பேர் சொந்த மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் சென்றுவிட்டனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் புன்யா சலைலா ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம் பேர் சொந்த மாநிலத்துக்கு மே 1-ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் இருந்து சென்றுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஷ்ராமிக் ரயில்கள் மூலம் இதுவரை 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றுள்ளனர். பேருந்துகள்…

நடிகை ஆண்ட்ரியா 40 நாட்கள் நடுகாட்டுக்குள்

நடிகை ஆண்ட்ரியா 40 நாட்கள் நடுகாட்டுக்குள் தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படக்குழுவினர் நடுக்காட்டுக்குள் 40 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தி விட்டு திரும்பியிருக்கிறார்கள். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் நாஞ்சில் கூறியதாவது:- “கா என்றால் காடு என்று அர்த்தம். காட்டுக்குள் நடக்கிற கதை. இதில் ஆண்ட்ரியா வனவிலங்குகளை படம் எடுக்கும் போட்டோகிராபராக நடித்து இருக்கிறார். அவர் நடுக்காட்டுக்குள் தங்கியிருந்து போட்டோ எடுக்கும்போது, ஒரு குற்றம் நடப்பதை பார்த்து விடுகிறார். அதன் விளைவுகள்தான் திரைக்கதை. சலீம்சவுத்ரி வில்லனாக நடித்து இருக்கிறார். “ஆண்ட்ரியாவிடம் நான் கதை சொல்ல புறப்பட்டபோது, அவர் ரொம்ப ‘செலக்டிவ்’ ஆக இருப்பார்...அவரிடம் கதை சொல்லி எளிதில் சம்மதம் வாங்க முடியாது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். நான் அரைமனதோடுதான் சென்றேன். அவரை நேரில் பார்த்தபோது, நான் கற்பனை செய்த பிம்பத்துக்கும், உண்மையான…

நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை

நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் வசந்த மாளிகை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்தி (வயது 36). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்கு உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மன உளைச்சலில் அவர் தவித்து வந்தார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் சொந்தமாக பங்களா உள்ளது. அங்கு அவரது தந்தை கருணாகரன் மட்டும் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி அபிநய வெங்கடேஷ் கார்த்தி இ-பாஸ் பெற்று காரில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆனூர் கிராமத்துக்கு சென்றார். இந்தநிலையில் நேற்று…

ஜோதிகா படத்தைத் தொடர்ந்து இணையதளத்தில், மேலும் 7 புதிய படங்கள்

ஜோதிகா படத்தைத் தொடர்ந்து இணையதளத்தில், மேலும் 7 புதிய படங்கள் ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில், அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி அந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறிய தாவது:- “சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தயாரித்துள்ளனர். அமேசான், பிரைம் வீடியோ ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம். இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக கோர்ட்டு சீன்கள் இருக்கும். ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினைகளை குடும்பப்பாசம், நகைச் சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். ஜெ.ஜெ.பிரடரிக் இயக்கியிருக்கிறார். ‘பொன்மகள் வந்தாள்’ படத்துடன் அனுஷ்கா…

இந்தியா முழுவதும் நாளை முதல் விமான சேவை

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை பதிவிட வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.