பாராளுமன்ற கலைப்பு, வேட்பு மனுத் தாக்கலுக்கு எதிராக 10 மனுக்கள்

பாராளுமன்ற கலைப்பு, தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு, வேட்புமனுத்தாக்கல் விவகாரம், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டும் கோரிக்கை நிராகரிப்பு உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக சுமார் 10 மனுக்கள் நேற்று வரை உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனுவும் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சில வழக்குகள் தொடர்பில் தெரிவிக்கப்படிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியில் சட்ட சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அனைத்து மனுக்களையும் நாளை திங்கட்கிழமையும் அடுத்து வரும் புதன்கிழமையும் ஆராய்வதற்கு உச்சநீதிமன்றம் தீர்மானித்திருக்கும் நிலையில் அவற்றை எந்த ரீதியில் அணுகுவது என்று ஆளும் தரப்பு கவனம் செலுத்தி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.

இதன் பொருட்டு பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகும் சட்ட வல்லுநர்கள் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முனைந்திருப்பதையும் அறிய முடிகிறது.

இந்த வழக்குகள் குறித்து அரசியல் வட்டாரங்களிலும் நீதித்துறை வட்டாரங்களில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு வருவதை காணமுடிகிறது அத்துடன் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் பெரிதும் கவனயிர்பை பெற்றிருப்பதும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொதுத் தேர்தலை நடத்தும் பொருட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானதெனவும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டப்படாமலிருப்பது மக்களின் இறையாண்மையை மீறுவதாகவும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 06 தரப்பினர்களால் சுமார் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இம் மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை திங்கட்கிழமையும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மூவரடங்கிய இரு அமர்வுகளில் ஆராயப்படவுள்ளன.

Related posts