உன்னதத்தின் ஆறுதல்! வாரம். 20. 18

நெருக்கடியான காலத்தில் பாதுகாப்பான வாழ்வு. சகோதனை;.பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்திப்;போம். இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. ஏசாயா 49:16. இந்த நற்சிந்தனையை முழுமையாக விளங்கிக்கொள்ள வேதப்புத்தகம் உள்ளவர்கள் ஏசாயா 49ம் அதிகாரம் முழுவதையும் ஒருமுறை வாசிக்கவும். அப்போதுதான் புரிந்து கொள்வீர்கள் தேவன் எப்படியாக தாம் தெரிந்துகொண்ட மக்களை பூரணப்படுத்துகிறார் என்று. முதலாம் வார்த்தையில் தேவசித்தம் தேட வேண்டியதன் அறிவுரையும், இறுதிவார்த்தையில் அதனால் வரும் தேவபெலனையயும் நமக்கு இது வெளிப்படுத்துகிறது. மேலே நாம் வாசித்த இந்த தேவனின் வாக்குத்தத்தம் (வாக்குறுதி) நமது உள்ளத்தை உருகச்செய்கிறது. இதிலே ஆண்டவருடைய அளவற்ற அன்பையும், மனதுருக்கத்தையும், தியாகமான காருண்யத்தையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. யாருக்கு தேவன் தமது உள்ளங்கையை காண்பிக்கிறார்? தேவன் எங்களை கைவிட்டுவிட்டார் எனப்புலம்பும் மக்களுக்கும், தேவன் தங்களை…

சகல தளங்களிலும் முத்திரை பதித்த தன்னம்பிக்கை கலைஞன்!

இந்தியத் திரையுலகில் மிகச் சில நடிகர்கள் மட்டுமே, படங்களின் வசூலை வைத்து அல்லாமல் நடிப்பின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். அந்தப் பட்டியலில் உள்ள நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் கண்டிப்பாக இடம்பெறும் பெயர் இர்ஃபான் கான். ஜனவரி 7, 1967-ம் ஆண்டு ராஜஸ்தானின் டோங் மாவட்டத்தில், நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இர்ஃபான் கான். இர்ஃபானுக்கு 18 வயதானபோது அவரது தந்தை காலமானார். நடிகராக ஆசையிருந்தும் தன்னம்பிக்கை குறைவாக இருந்த இர்ஃபானுக்கு, மிதுன் சக்ரவர்த்தி நடித்த 'ம்ரிகயா' படம் தான் நடிக்க நம்பிக்கை தந்திருக்கிறது. அப்படி ஒரு நிறம் கொண்ட நடிகர் நடிக்க முடியுமென்றால் தானும் முடியும் என்று உணர்ந்திருக்கிறார். இதைப் பற்றி இர்ஃபானே ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலையில் பட்டம் பெற்ற இர்ஃபான் 1984-ம் ஆண்டு டெல்லியின்…

லாக்டவுன்: ஆண்ட்ரியா நடத்த குறும்படம் வெளியானது!

‘லாக்டவுன்' எனும் முன்று நிமிட குறும்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் திரைப்பிரபலங்களில் சிலர் வீட்டில் இருந்தபடியே ஆல்பம், குறும்படம் என நடித்து வருகின்றனர். நடிகர் ஆதவ் கண்ணதாசன், 'லாக்டவுன்' என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா கூறுகையில், ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் இந்த குறும்படம் இறித்து ஆதவ் கண்ணதாசன் என்னிடம் சொன்னார். இது முழுக்க முழுக்க ஐபோனில் படம் பிடிக்கப்பட்டது. இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம் என்றார். மேலும் இந்த படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார். ‘லாக்டவுன்' எனும் முன்று நிமிட குறும்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். இந்த படத்தில்…

எனது இதயம் உடைந்து விட்டது – ரஜினிகாந்த் இரங்கல்

நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார். பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரிஷி கபூரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…