என் படத்தை கொன்னுட்டாங்க என்று சேரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி என்ற தரமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் டைரக்டு செய்து நடித்த ஆட்டோகிராப் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் சேரன் கதாநாயகனாக நடித்த ‘ராஜாவுக்கு செக்’ படம் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா வர்மா ஆகியோர் நடித்து இருந்தனர். சாய் ராஜ்குமார் இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த வசூல் இல்லை. ராஜாவுக்கு செக் படம் தற்போது இணைய தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்தேன். நல்ல திகில் படமாக இருந்தது என்று பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து…

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உருவாகி இன்று உலகையே முடக்கிப்போட்டு இருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘மக்கள் பொது ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும் மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். இதன்படி, இன்று நாடு முழுவதும் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த…

வட மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் 5 இல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். மேலும், வடக்கின் 5 வடமாவட்டங்களில் வாசிக்கும் மக்கள் தமது மாவட்டங்களில் இருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது . யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரை சந்தித்த மற்றும் போதனையில் கலந்து கொண்ட அனைவரையும் இனங்காணும் வரையில் இந்த பயணத் தடை நீடிக்கப்படும். குறித்த 5 மாவட்டங்களில் வசிக்கும் மக்களை…