வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வைத்து

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று (13) முதல் குறித்த மையங்கள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காணப்படும் நாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு வருகை தரும் பயணிகளை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஆகிய பகுதிகளில் குறித்த மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஏற்கனவே அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதற்காக இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

Related posts