மாதவிடாய் நேரத்தில் உணவு சமைத்தால் மறுபிறவியில் நாயாக பிறப்பர்

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தங்கள் கணவருக்கு உணவு சமைத்தால் மறுபிறவியில் அவர்கள் நாயாகவும், அந்த உணவை உண்ணும் கணவர், காளை மாடாகவும் பிறப்பார்கள் என்று குஜராத்தில் மதகுரு ஒருவர் பேசியுள்ளார். இந்த கருத்தைச் சுவாமி குருனாஸ்வரூப் தாஸ்ஜி என்ற மதகுரு பேசியுள்ளார். சுவாமிநாராயன் கோயிலின் முக்கிய பதவியில் குருஸ்னஸ்வரூப் இருந்துவருகிறார். சமீபத்தில் கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடையைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தி கைதான கல்லூரி முதல்வர் , அலுவலர்கள் பணியாற்றிய கல்லூரியும் சுவாமி நாராயணன் கோயிலில் இயங்கி வருகிறது. குஜராத்தில் கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட்(எஸ்எஸ்ஜிஐ) இயங்கி வருகிறது. சுவாமி நாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எழுதப்படாத விதி ஒன்று அமலில் உள்ளது. அதாவது இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள்,…

காதலித்துதான் கல்யாணம் செய்துகொள்வேன்.. நடிகை கல்யாணி

பிரபல டைரக்டர் பிரியதர்ஷன்- நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங் களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பிரபல டைரக்டர் பிரியதர்ஷன்- நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங் களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’வில் நடித்தார். அடுத்து மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை பூர்த்தியாகியிருக்கிறது. ‘வரனை ஆவசியமுண்டு’ (மணமகன் தேவை) என்ற படத்தில் நடித்து, கேரள ரசிகர் களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல டைரக்டர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனுப் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தயாரித்திருக்கும் முதல் படம் இது. படத்தின் வெற்றியில் பூரித்துப் போயிருக்கும் கல்யாணியிடம் சில கேள்விகள்: நீங்கள் நினைத்ததுபோல் வெற்றி வசப் பட்டுவிட்டதாக கருதுகிறீர்களா? நான் எப்போதும் நிறைய ஆசைகளை…

பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது!

தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தனுஷ் இதுவரை 39 படங்களில் நடித்து இருக்கிறார். 40-வது படம் தயாரிப்பில் இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதற்குள் அனைத்து ‘ஏரியா’க்களும் வியாபாரமாகி விட்டது. படத்தை திரைக்கு கொண்டு வரும் உரிமையை டிரைடன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘அசுரன்,’ ‘பட்டாஸ்’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதால் தனுசின் புதிய படம், மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுசுடன் ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன், கலையரசன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

பாகுபலி மார்பிங் வீடியோ; டுவிட்டரில் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், டுவிட்டர் கணக்கு ஒன்றில், அதிபர் டிரம்ப் போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்யப்பட்ட பாகுபலி பட வீடியோ வெளியானது. இந்த வீடியோ பதிவை டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் மீண்டும் ரீ-டுவீட் செய்துள்ளார். அதில், இந்தியாவில் உள்ள எனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது குறித்து எதிர்நோக்கி இருக்கிறேன் என தெரிவித்து…

105 வயதிலும் படிப்பை தொடர்ந்த மூதாட்டி

105 வயதிலும் படிப்பை தொடர்ந்த மூதாட்டிக்கு எனது வணக்கங்கள் என 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறை 2வது முறையாக பா.ஜ.க. ஆட்சியேற்ற பின்னரும் தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அரசின் முடிவுகள், மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் பேசி வருகிறார். இதேபோன்று மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை குறித்தும் அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான கடைசி ஞாயிற்று கிழமையான இன்று…

நான் இறந்துவிட்டேன் நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ

எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் சாமியார் நித்யானந்தா. உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்து கொண்டு... நித்தம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கிறார் நித்யானந்தா. தினம் தினம் ஒரு வீடியோ என்ற வகையில் புது புது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போதும் ஒருவீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது: 20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை. சில நாடுகளுடன்…

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிறுப்பு வசந்த புரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இன்று (22) காலை 9 மணியளவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸ் நிலைய விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் துள்ளுக்குடியிறுப்பு வசந்தபுரம் பகுதியில் 205 கிலோ 44 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்தோடு, பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு…