வளைகுடா எரிவதற்குத் தயாராகவுள்ள தீப்பெட்டி ஜாவத் ஸரீப்

அமெ­ரிக்­கா­வா­னது வளை­குடா பிராந்­தி­யத்தை தீப்­பற்றி எரி­வ­தற்குத் தயா­ரான தீப்­பெட்­டி­யாக மாற்றி வரு­வ­தாக ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப் நேற்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். அமெ­ரிக்கா ஈரா­னுடன் செய்து கொண்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெற்று ஈரானின் எண்ணெய் ஏற்­று­ம­தி­களை முடக்கும் வகை­யி­லான தடை­களை மீள விதித்­த­தை­ய­டுத்து இரு தரப்பு நாடு­க­ளுக்கும் ஏற்­பட்ட முறுகல் நிலையால் ஹொர்மஸ் நீரிணை மூல­மாக வளை­குடா பிராந்­தி­யத்­தி­னூ­டாக மேற்­கொள்­ளப்­படும் எண்ணெய்க் கப்­பல்­களின் போக்­கு­வ­ரத்து பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளது. கடந்த மே, ஜூன் மாதங்­களில் 6 எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடி­வைப்­பு­களால் சேத­ம­டைந்­தமை மற்றும் கடந்த ஜூலை மாதம் பிரித்­தா­னிய கொடி பறக்­க­வி­டப்­பட்ட எண்ணெய் தாங்கி கப்பலொன்றை ஈரான் கைப்­பற்றி தடுத்து வைத்­தமை என்­ப­ன­வற்­றை­ய­டுத்து அமெ­ரிக்கா வளை­குடா பிராந்­தி­யத்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அந்தப் பிராந்­தி­யத்தில் பய­ணிக்கும் வர்த்­தகக் கப்­பல்­களைப் பாது­காக்கும் இலக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட…

சினிமாவுக்கு முழுக்கு; நடிகை சமந்தா கர்ப்பம்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன. மெர்சல், தெறி, அஞ்சான், இரும்புத்திரை, யூடர்ன், நடிகையர் திலகம், தங்க மகன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்டவை சமந்தா நடிப்பில் வந்த முக்கிய படங்கள். தெலுங்கில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ பேபி’ படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட்…

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை 28 பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் போட்டி இருந்தது. ஏற்கனவே 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்ததால் இந்த தொகுதியிலும் தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்ததால் அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினரும் இருந்தனர். இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. முன்னிலை முதல் சுற்றிலேயே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 25,719 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை விட 913 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை…

அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார். காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கூடி வருகின்றனர் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார். நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்திதார். ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தரிசிக்க காத்திருக்கின்றனர். இது இறுதிக்கட்டம் என்பதால் மக்கள் கூட்டம் இன்னும்…

ஒருவர் தன்னைத் தானே வேட்பாளர் எனக் கூறி வருகின்றார்

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா வலியுறுத்தினார். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருப்பது அவர்களுடைய சரியான முடிவு என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னரிமை அளிப்பவராக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இராஜகிரியவில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல்…