ஜனாதிபதி ரணிலின் வருகையை எதிர்த்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் கதிர்காமநாதன் கோகிலவாணி மேலும் தெரிவிக்கையில்,

இன்று கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும், அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்திடம் கையால் ஒப்படைத்தும் விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுவரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

எத்தனையோ போராட்டங்கள் வாயிலாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் இதுவரையில் எமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரை காத்து கொண்டோம் அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாக மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வந்தது.

குறித்த நினைவு கஞ்சிகளை இராணுவம் மற்றும் பொலிசார் கஞ்சியை காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துமுள்ளனர்.

ஆனால் இன்று நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதுவரையில் எந்த குழப்பங்களும் இல்லாமல் நடாத்துகின்றனர்.

அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இதன் காரணங்களுக்காகவே ஐனாதிபதியின் வருகையை இன்று எதிர்த்து சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts