ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

——–

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதானது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளுக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதனால் சஜித் பிரேமதாச பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை தற்போது நாலக கொடஹேவாவும் ஜி.எல். பீரிஸ் போன்ற மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (21) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல தொகுதி அமைப்பாளர் நிமல் பிரான்சிஸ்கோ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார். அது தொடர்பிலும் அமைச்சர் இங்கு கருத்து தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியை இன்று கைப்பற்றி வைத்திருப்பது நாட்டை சீரழித்து கோட்டாபய ராஜபக்சவை இல்லாதொழித்த வியத்மக உறுப்பினர்கள், கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன மூலம் தேர்தலில் போட்டியிட்டு 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதன் பின்னர், நாடு நெருக்கடி நிலையயை அடைவதற்கு தவறான ஆலோசனை வழங்கியதும் இவர்களே. ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவிற்கு இன்று இடமில்லை.

நேற்று முன்தினம் (20) சஜித் பிரேமதாச கட்சியின் உறுப்பினர்கள் குழுவிற்கு இரவு விருந்தொன்றை வழங்கினார். வசந்த பண்டார, ஜி.எல். பீரிஸ், ரஞ்சித் மதுமபண்டார, லக்ஸ்மன் கிரியெல்ல, திலீப், கயந்த, மயந்த, சஞ்சய், அலவத்துவல, கபீர், எரான் ஆகியோர்கள் வருகைதந்திருத்தனர் . கபீர், எரான் ஆகியோரின் பொருளாதாரக் கொள்கை மாறுபட்டவை என்பதனால் அவர்கள் எம்முடன் இருக்க தகுதியற்றவர்கள். எனவே ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது இருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கையல்ல. மாறாக நாலக கொடஹேவா, ஜி.எல். பீரிஸின் பொருளாதாரக் கொள்கை தான் உள்ளது.

தற்போது எம்.பி.க்கள் பலர் எங்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். மே தினத்தில் ஏன் இணைத்துகொள்ள வில்லை என சிலர் கேட்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் உண்டு அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. உரிய நேரத்தில் அவை நடக்கும்.

ஏனெனில் சிலர் தேர்தல் பிரசாரங்களை முன்னதாகவே ஆரம்பித்து களமிறங்கும் நிலையில் உள்ளனர். நூற்றுக்கு 3 வீதமாக வீழ்ச்சியடையும் பயணம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் காலங்களில் எங்களுடன் இணைந்து கொள்ள கலந்துரையாடி வருகின்றனர்.

இந்த ஒவ்வெரு குழுக்களும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வழியில் இணைத்துகொள்ளும் அதனால் தான் சஜித் பிரேமதாசவிடம் இதனை செய்ய வேண்டாம் என கட்சியை கொண்டு செல்ல முயற்சிப்பவர்களும் உள்ளனர். அதற்கு சஜித் பிரேமதாச செவிசாய்க்காவிட்டால் தனித்தனியாக எம்முடன் இணைய தயார். அதற்கான ஒத்திகையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்ட நிமல் பிரான்சிஸ்கோ ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல தொகுதி அமைப்பாளர் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வெற்றிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்;

“தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எதிகொள்ள வேண்டியுள்ளது. அதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ரணிலை ஜனாதிபதியாக்க ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராகி வருகிறோம். தற்போது சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் உருவாகி வருகின்றன.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கூறுகிறது.

ரணில் விக்கிரமசிங்க பலமாக வந்து ​​ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, ​​ஐக்கிய தேசியக் கட்சியின் மரண அடியாக அமையும் என்பது ஐக்கிய மக்கள் சக்திக்கு தெரியும்.

Related posts