அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தைப் போல உணர்கிறேன் என்று அயோத்திக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று கும்பாகிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், நாடு முழுவதிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்றே விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் இன்று அயோத்தி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இதை ஒரு அரிய தருணமாக நாங்கள் பார்க்கிறோம்.

என்னுடைய இஷ்ட தெய்வமான அனுமாரே என்னை நேரில் வந்து இந்த விழாவுக்கு அழைத்ததைப் போல உணர்கிறேன். இந்த பிரதிஷ்டை நிகழ்வைக் காண நாங்கள் மிகவும் பாக்கியம் செய்துள்ளோம்” இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்சரண், “இது ஒரு நீண்ட காத்திருப்பு. அங்கே செல்வதை நாங்கள் அனைவரும் மிகவும் கவுரவமாக உணர்கிறோம்” என்றார்.

Related posts