புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பாகிஸ்தான் தடை

காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை எளிமையாகக் கொண்டாடும்படி நாட்டு மக்களை அது கேட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் அன்வார் உல் ஹக் ககார், காசா நிலைமை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் அரசு முழு தடை விதிக்கிறது என்றார்.

“பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை, குறிப்பாக காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் உலகை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஷார்ஜாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts