தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை

தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என உலகதமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் தெரிவித்துள்ளார் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிக்கின்றீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கேள்வி எழுப்பியவேளை சுரேன் சுரேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது சுரேன் சுரேந்தின் இதனை தெரிவித்துள்ளார்

நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக பௌத்த மதகுருமார்கள் அணிதிரண்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை 2500 வருடங்களாக பௌத்தமதகுருமார் காப்பாற்றியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த காலத்தில் 17 படையெடுப்புகள் இடம்பெற்றன விடுதலைப்புலிகள் பிரிவினைவாத போரில் ஈடுபட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதே பயங்கரவாதம் ஆகவே பயங்கரவாதத்திற்கான காரணம் நியாயப்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது நாங்கள் முழுமையாக பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதற்கு மேற்குலக நாடுகள் அனுமதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றீர்களா என்ற சரத்வீரசேகரவின் கேள்விக்கு உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் நாங்கள் தனிநாட்டு கொள்கையை ஆதரிக்கவில்லை நாங்கள் அதற்கு ஆதரவளித்திருந்தால் நான் இங்கு வந்திருக்கமாட்டேன் என தெரிவித்தார் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts