லியோவை பார்க்க ஆவல் – ஷாருக்கான் டுவீட்

மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் அக்டோபர் 19 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லியோ மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் தளபதியின் லியோ படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன், ஐ லவ் யூ விஜய் சார் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எக்ஸ்- தளத்தில் பதிவிட்டுள்ளார்.

——

‘ஜவான்’ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,004.92 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts