தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள்

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் உத்தேச ஆணைக்குழு குறித்து கடந்தகால உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனைகளில் ஈடுபடாததால் அவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கடந்தகால ஆணைக்குழுகளின் ஆதாரங்களை புறக்கணித்துள்ளதும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பு படையினரின் முன் ஆபத்திற்குள்ளாக்கியுள்ளதும் அவர்கள் மீண்டும் ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தோன்றினால் மீண்டும்மன அழுத்தங்களிற்கு உள்ளாவார்கள்என்பதும் அவர்கள் உத்தேச ஆணைக்குழுவை நிராகரிப்பதற்கான காரணம் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பினால் அவர்கள் எங்களை கைதுசெய்வார்கள் – இலங்கையின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற 39 பக்க அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த ஆவணம் இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களின் ( தமிழ் சிறுபான்மையினத்தவர்கள்) சார்பில் நீதிகோருபவர்கள் பரப்புரை செய்பவர்கள் செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவதை ஆவணப்படுத்தியுள்ளது.

மாற்றுக்கருத்துடையவர்களை மௌனமாக்குவதற்காக அதிகாரிகள் மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டததை பயன்படுத்துகின்றனர் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கோருபவர்களிற்கு எதிராகவும் இதனை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்தின் ஆதரவுடனான நில ஆக்கிரமிப்புகள் தமிழ் முஸ்லீம் சமூகத்தினரினது நிலத்தையும் அவர்களது வழிபாட்டு இடங்களையும் இலக்குவைக்கின்றன என வும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உண்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் அவசியமான விடயங்கள் ஆழமான தேவையான விடயங்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி ஆனால் நம்பகதன்மை மிக்க செயற்பாடுகளிற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் ஆதரவும் அந்த சமூகங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வருவதும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்..

சமீபத்தைய ஆணைக்குழுவின் நோக்கம் காணாமல்போனவர்களின் நிலையை கண்டுபிடிப்பதோ அல்லது அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதோ இல்லை மாறாக தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் குறித்த சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து தப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை அதன் சமீபத்தைய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts