ஜெயித்தாரா ஜெயிலர்…? படம் எப்படி இருக்கு…?

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில். வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் அப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு ‘ஜெயிலர்’ வெளியாகி உள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.

மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை சென்னையில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்க்ரீனில் பார்த்தார். ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜெயிலர் படத்தின் முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஜெயிலர் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம். திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை 4/5 என்று மதிப்பிட்டுள்ளார்.

“டைகர் முத்துவேல் பாண்டியனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் முழுவதும் கம்பீரமாகவும், வீரமாகவும், இருக்கிறார். ஒரு நல்ல கதைக்களம் மற்றும் அற்புதமான இயக்கத்துடன் நெல்சனின் மறுபிரவேசம் என குறிப்பிட்டு உள்ளார்.

Related posts