அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்க காணிகள்

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்க காணிகளை விடுவிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து காணி சீர்திருத்த ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு நிறுவனங்களால் அரச காணிகளை விடுவிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதால், ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் பதினைந்து நாட்களில், இதற்கான புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரச காணிகளை அப்புறப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நில அளவைப் பணிகளை நிறைவு செய்த தமது ஆணைக்குழுவின் கீழ்வரும் 57,000 காணிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts