ரோசி இன்னும் மேயர் இல்லத்தில் இருக்கிறார்!

முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (08) முறைப்பாடு செய்துள்ளது.

கொழும்பு நகர முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க மேயர் பதவி நீக்கப்பட்ட போதிலும் அவர் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாகவும் அரச சலுகைகளை அனுபவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

”கொழும்பு நகர முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்னும் வசிக்கிறார். இப்போது அவர் மேயர் இல்லை. சாதாரண வேட்பாளர் . அனாலும் அவர் இன்னும் அங்கே வசிக்கிறார். இதுமுறைகேடானது .

அவரது பதவிக்கு காலம் முழுவதும் மின்கட்டணமாக தொண்ணூற்றொரு இலட்சம் ரூபாய்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது. சராசரியாக மாதாந்தம் 2 இலட்சம் ரூபா மின் கட்டணம் வருகிறது. இது மக்களின் வரிப்பணம் . கொழும்பு வாழ் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படுகின்றனர் . ‘
வீதி விளக்கு ஒன்று உடைந்தால் மாற்றுவதற்கு 6 மாதங்களாகிறது. ஆனால் மாநகர சபை மேயரின் தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும் நான்கு சேவையாளர்கள் போதுமான நிறையில் ரோசிக்கு

9 சேவையாளர்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் பணம் இவ்வாறு மோசடி செய்யப்படுவது குறித்து முறைப்பாடு அளித்துள்ளோம்” என மேற்றபடி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts