இலங்கையர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களை மீட்டு மெரைன் பொலிசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

தகவலின் பெயரில் மெரைன் பொலிசார் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்று பார்க்கும் பொழுது அரிச்சல் முறை கடற் பகுதியில் இலங்கை முல்லை தீவு தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உள்ளிட்ட ஏழு பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வந்தவர்களை மெரைன் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வைத்து விசாரணை செய்யும் பொழுது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழி இன்றி இலங்கை முல்லைதீவு தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த நியூட்டன் வில்லியம், வனிதா, தோனி, ஜோன், விஷால், ஷாலினி, அதிஸ், ஆகிய ஏழு பேர் இலங்கையில் இருந்து இலங்கை பணம் கொடுத்து மர்ம படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சென்று இறங்கியது.

முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இவர்களிடம் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து கியூ பிரிவு போலீசார் மற்றும் மரைன் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் இதுவரை இலங்கையில் இருந்து இன்று வருகை தந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 244 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Related posts