காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு நிச்சயம்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க யாழ். நகரில் தெரிவித்தார்.

வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வீதம் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களுக்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமான விடயம். அதேபோல விவசாய மக்களுக்கு அதாவது இந்த பெரும் போகத்தின் பின்னர் நெல்லினை விற்பனை செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றனர்.

இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளை கழித்து மிகுதி நெல்லை வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அவர்களுடைய விருப்பத்தின்படி நேற்று மக்களுக்கு வழங்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதாவது கொரோனா நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது. அதேபோல பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது அதேபோல பொருட்களைக் கொள்ளவும் செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

Related posts