330 மில்லியனில் 121 மில்லியன் டொலர் இந்திய கடன்

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட கடன் தொகையில், இந்திய கடன் திட்டத்தின் முதல் தவணையை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கான தவணைக் கொடுப்பனவான 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வியாழக்கிழமை (23) செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் இவ்வாறான கடன் நிதியானது மத்திய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவது வழக்கமாகும். ஆயினும் இம்முறை, திறைசேரி பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளதால், அந்நிதியை கடன் இறுத்தலுக்கு பயன்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts