ஆப்கானின் முன்னாள் எம்.பி சுட்டுக் கொலை

ஆப்கான் தலைநகர் காபுலில் வைத்து முன்னாள் பெண் பாராமன்ற உறுப்பினரான 32 வயது முர்சல் நபிசாதா மற்றும் அவரது மெய்க்காவலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

2021 ஓகஸ்ட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காபுலில் தொடர்ந்து தங்கியிருந்த ஒரு சில பெண் எம்.பிக்களில் ஒருவராக நபிசாதா இருந்தார்.

கடந்த ஞாயிறன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் அவரது சகோதரர் மற்றும் மற்றொரு மெய்க்காவலர் காயமடைந்துள்ளார். நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருந்தபோதும் அவர் ஆப்கானுக்காக பயமின்றி போராடினார் என்று அவரது சகாக்கள் குறிப்பிட்டுள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின், கிட்டத்தட்ட அனைத்து அரச பணிகளில் இருந்தும் பெண்கள் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக காபுல் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts