பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கி இந்த போதைப்பொருள் சோதனைகள் தொடரும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

—–

ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் அமேசான் நிறுவனம் 18,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனமானது 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் பணிநீக்கங்கள் பெரும்பாலும் நிறுவனத்தின் இ-காமர்ஸ் மற்றும் மனித வள அமைப்புகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஜனவரி 18 முதல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை நிறுவனம் தொடர்பு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 பேர் கொண்ட கார்ப்பரேட் பணியாளர்களில் இது 6 சதவீதம்.

நிச்சயமற்ற பொருளாதாரத்தை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கையில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் ஊழியர்களை வெகுவாக பணியமர்த்தியுள்ளோம் என்றார் ஜாஸ்ஸி.

இதற்கிடையில், அமேசான் இன்க் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர் கடனை வழங்க சில கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்த கடனானது 364 நாட்களில் முதிர்ச்சியடையும், இது மேலும் 364 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்த நிதியானது நிறுவனத்தின் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றார்.

பணவீக்கம் வணிகங்களையும் நுகர்வோரையும் செலவைக் குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.

அமேசான் மட்டுமல்லாமல் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் கூட தங்களின் ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts