சீனா கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அச்சத்தை..

40 வயதான பாடகியான ஓபரா சு லான்லன் கடந்த மாதம் இறந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கL தெரிவிக்கப்படவில்லை.

சீனா தனது கடுமையான பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை டிசம்பரில் நீக்கியது இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுடுகாடுகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, மேலும் டிசம்பர் முதல் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. இப்போது, நிமோனியா போன்ற சுவாச நோய்களால் இறப்பவர்கள் மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள்.

பிரபல பாடகி சு லான்லான் மற்றும் பிறரின் மரணம் அதிகாரபூர்வ கணக்குகளில் பதிவானதை விட பெரிய இழப்புகள் பற்றிய ஊகங்களைத் தூண்டுகிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது. அதுபோல் புத்தாண்டு தினத்தன்று, நடிகர் கோங் ஜிண்டாங் பலியானார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.83 வயதான காங், நாட்டின் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடரான ‘இன்-லாஸ், அவுட்-லாஸ்’ இல் நடித்ததில் பிரபலமானவர்.

அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக இல்லை, ஆனால் மற்ற வயதானவர்களின் சமீபத்திய இறப்புகளுடன் இணைத்துள்ளனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது. சீனாவில் புதன்கிழமை ஒரு புதிய கொரோனா மரணம் பதிவாகியுள்ளது, தற்போது அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 5,259 ஆக உள்ளது. ஆனால் பல்வேறு மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தினசரி ஆயிரக்கணக்கான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் காணப்படுகின்றன.

உலகிலேயே மிகக் குறைந்த கொரோனா இறப்பு எண்ணிக்கையை அரசியல் காரணங்களுக்காக சீனா குறைவாக காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனா அதிகரித்து வருவதால் நோயாளிகள், வயதானவர்கள், நடைபாதையில் ஸ்ட்ரெச்சர்களில் படுத்துக் கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், பீஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில், நாடு வெளிப்படையாகவும் கொரோனா பாதிப்பு விவரங்கலை உலக சுகாதார அமைப்புடன் பகிர்ந்து கொண்டது என்று கூறினார்.

பூஜ்ஜிய கொரோனா கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சீன எதிர்ப்பாளர்கள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரைச் சேர்ந்த சில எதிர்ப்பாளர்கள், சீன காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

சில நவீன தொழில்நுட்பம், நெட்வொர்க் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரின் தொலைபேசி எண்களின் தரவுகலையும் சேகரித்துள்ளனர் என்று வாஷிங் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

Related posts