பதவிகளை ஏற்காத காரணத்தை சஜித் தெரிவித்தார்

சிறப்பாகக் காணப்பட்ட நாட்டை நாம் வீழ்த்தியுள்ள இடம்” என்பது பொருந்துவது அன்றா ? இன்றா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கொலன்னாவையில் கேள்வி எழுப்பினர்.

இப்போது ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத் தொடர் இடம் பெற்று வரும் வேளையில் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் பொருளாதார உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள், மக்கள் போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்களை விரட்டியடித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனாலும் அவர்களைப் பாதுகாக்கும் வாயில்காப்பாளர் ஒருவர் பதவிக்கு வந்துள்ளதே இன்று நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களுக்கு பெரும் சேவையை ஆற்றிய ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முழுமையாக ராஜபக்சர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து தனக்கும் பரிதாபம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு சிலர் பிரசார மேடைகளில் ஏறி, “சிறப்பாகக் காணப்பட்ட நாட்டை நாம் வீழ்த்தியுள்ள இடம்” என்று கூறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் அந்தக் கதை செல்லுபடியாகும் அன்றா அல்லது இன்றா என்பது குறித்து பத்திசாலித்தமான மக்களுக்கு ஒரு புரிதல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு பல தடவைகள் கேட்டுக் கொண்ட போதும், அத்தகைய எந்த சந்தர்ப்பங்களிலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டது, அந்நேரத்தில், தனது தலைவரைப் புறக்கணித்தும் துரோகமிழைக்கும் எதிர்பார்ப்பும் தன்னிடம் இருக்காததால் எனவும், அன்றைய சட்டப்பூர்வமான பிரதமர் விக்கிரமசிங்க அவர்களே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அப்போது அவர் எடுத்த கொள்கை ஒருபோதும் மாறாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று இந்நாட்டு மக்கள் மற்றும் போராட்டத்தின் புனித இலக்குகளை காட்டிக்கொடுத்த வன்னம் பதவிகளைப் பெறும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்பதாலேயே ஜனாதிபதி பிரதமர் பதவியை தான் ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts