கோத்தபய ராஜபக்சே மகன் வீடு முன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வசித்து வரும் அவரது வீட்டின் முன் குவிந்த இலங்கைவாசிகளில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபயாவை நாடு திரும்ப வேண்டும் என அவரிடம் கூறும்படி கோஷங்களையும் எழுப்பினர்.

அவரிடம் உள்ள பணம் இலங்கை மக்களின் பணம். அதனை திருப்பியளிக்க வேண்டும். நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் சன்லேண்ட் பகுதியில் இருக்கிறோம். தற்போது, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வீட்டின் முன் இருக்கிறோம்.

அவரிடம் இலங்கை மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் உள்ளது. அதனை வைத்து இந்த ஆடம்பர சொத்துகளை வாங்கியுள்ளார். இது எங்களுடைய பணம். எங்களுடைய சொத்து என கூறினர்.

ஆனால், டுவிட்டரில் பதவிட்ட இலங்கைவாசிகள் சிலர், மனோஜ் ராஜபக்சே அரசியலில் இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் அவருக்கு, அவரது தந்தையின் அரசியலுடன் தொடர்பில்லை என தெரிவித்து உள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் கூறும்போது, அமெரிக்காவுக்கு முதன்முறையாக மனோஜ் ராஜபக்சே வந்தபோது, தங்குவதற்கு என எந்த இடமும் இல்லை.

ஆனால், குறுகிய காலத்தில் பன்மடங்கு மதிப்புள்ள இதுபோன்ற சொத்துகளை அவரால் எப்படி வாங்க முடிந்தது? என கேள்வி எழுப்பியுள்ளனர். சொத்துகள் பற்றிய விவரங்களை மனோஜ் ராஜபக்சே அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அப்படி செய்யாவிடில், மனோஜுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

Related posts