புதிய அரசை அமைக்க நாங்கள் தயார்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட மொட்டு அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிந்துவிட்டதாகவும், அவர்கள் இந்த அழகான தீவை அழித்தனர் எனவும், இவ்வாறு அழிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் தான் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட வன்னம் தெரிவித்தார்.

நாட்டை ஸ்திரப்படுத்தி,நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை நியமிப்பதற்கு தாம் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செயற்பாட்டிற்கு எதிராக யாராவது நாடாளுமன்றத்தில் சதிகளை மேற்கொண்டால் அது தேசத்துரோக செயல் எனவும்,நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் தனக்கு ஒத்துழைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

——

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தற்போது கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.

Related posts