காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில்

வெங்கல்ராவ், கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருக்கிறார். வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ், ஃபைட்டராக இருந்து காமெடிக்கு மாறியவர்.

‘பணக்காரன்’, ‘ராஜாதி ராஜா’ கால ரஜினி, அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டவர் வெங்கல் ராவ். விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர் அவர்.

சினிமாவில் ஃபைட்டராகத் தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ் சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர்.

வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் அவரது டீமில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர்.

அதில் வெங்கல் ராவும் ஒருவர். இந்நிலையில் வடிவேலு மீண்டும் களம் இறங்கிய பிறகு பழைய ஆட்களையும் தனது கூட்டணியில் சேர்த்து வருகிறார். இப்போது சுராஜ் இயக்கி வரும் ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் வெங்கலுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

இந்நிலையில், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வெங்கல்ராவ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related posts