நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை

எதிர்வரும் போகத்தில் அறுவடை முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை குறைவடையும் என நிபுணர்கள் கணிப்புகளை முன்வைப்பதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார்.

பாரியளவில் விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தில் உள்ள சிலர் நாட்டிற்கு வருவதாக கூறப்படும் உரக்கப்பல் இன்னும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய உணவுப் பற்றாக்குறைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்னவென்பது அரசாங்கத்துக்குக் கூடத்தெரியவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரிசி தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், ​​எந்த நாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படப்போகிறது என்பது கூட அரசுக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடும் நாட்டை உருவாக்க இடமளித்து விட்டு அரசாங்கம் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (24) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயம் மற்றும் உணவு விநியோக சேவைத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் பலருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts