இலங்கை மீது அமெரிக்க வங்கி வழக்கு

இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பத்திரத்தில் முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணம் மற்றும் வட்டியை செலுத்துமாறு மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையினால் வழங்கப்பட்ட 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மைப் பத்திரம் அடுத்த மாதம் 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது. இலங்கை இதுவரை இரண்டு இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியுள்ளதாக குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

Related posts