ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட 21 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோட்டஸ் சுற்றுவட்டத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் தேரர் ஒருவர், பெண்கள் 4 பேர் மற்றும் 16 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விரைவில் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்படும் என டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
21வது திருத்தத்தை முன்னெடுத்துச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

—-

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

Related posts