19 ஆவது அரசியலமைப்பை திருத்தங்களுடன்…

19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவிற்கு இன்று (25) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கூடிய போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

——

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்றும் மீண்டும் இடைநிறுப்பட்டுள்ளது

S&P SL20 சுட்டெண் விட 7.5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 11.02 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முற்பகல் 11.32 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்றும் (26) முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 1 நிமிடம் மட்டுமே நீடித்தது.

S&P SL20 சுட்டெண் விட 5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.31 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முற்பகல் 11.01 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts