பீஸ்ட்’-யை பீட் பண்ணுமா கே.ஜி.எப் 2…!

படம் முழுக்க ராக்கியாக மிரட்டியிருக்கிறார்யாஷ். அவர் வரும் காட்சிகளில் பின்னணி இசையின் காரணமாக திரையரங்குகள் தெறிக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் கே.ஜி.எப் 2

முதல் பாகத்தில் கருடன் இறந்த இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. ஆனந்த் நாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு பதிலாக அவரது மகன் பிரகாஷ் ராஜ் மாளவிகாவிடம் கதை சொல்கிறார்.

கருடாவை கொன்ற பின்னர் கே.ஜி.எப்-ஐ ராக்கி பாயான யாஷ், தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வருவது போல் முதல் பாகத்தை முடித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்தில் கே.ஜி.எஃப்-ல் உள்ள தங்க சுரங்கத்தில் வேலை பார்க்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து நன்கு பார்த்துக் கொள்கிறார் யாஷ்

ஒளிப்பதிவு இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் என உலகத் தரமான படமாக உள்ளது கேஜிஎப் 2. இதன் காரணமாக 2 மணி நேரம் 48 நிமிடங்கள் கேஜிஎப் என்ற அந்த உலகத்துக்கு சென்றுவந்த உணர்வை அளித்திருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

ஒன் மேன் ஷோ என்பதற்கே படம் முழுக்க ராக்கியாக மிரட்டியிருக்கிறார் யாஷ். அவர் வரும் காட்சிகளில் பின்னணி இசையின் காரணமாக திரையரங்குகள் தெறிக்கிறது.

நாயகன் யாஷ், முதல் பாகத்தை போன்று இதிலும் செம்ம மாஸாக இருக்கிறார். படம் முழுக்க கெத்தான தோற்றத்துடன் வலம் வரும் யாஷ், ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்பி உள்ளார். சில காட்சிகள் பார்க்கும் போதே நமக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பலம், சேர்த்துள்ளது.

அதீரா என்கிற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சஞ்சய் தத்

நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி அழகாக மிளிர்கிறார்.பிரதமராக நடித்துள்ள ரவீனா டண்டன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பிரகாஷ் ராஜ் கதை சொல்லும் விதம் படத்தை சுவாரசியப்படுத்துகிறது.

பாடல்கள், பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு என படத்தை அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ரவி பஸ்ருர். கேஜிஎப் முதல் பாகத்தின் பின்னணி இசையையும் சரியான இடங்களில் பொறுத்தி படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் அதிகமுள்ள இந்தப் படத்தில் அன்பறிவின் சண்டை வடிவமைப்பு மிரட்டலாக இருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களின் கடுமையான உழைப்பினால் இப்படி ஒரு பிரம்மாண்டமான படம் சாத்தியமாகியுள்ளது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் நம்பாமல் தனது சுவாரசியமான திரைக்கதையின் மூலம் பிரம்மாண்டமான படத்தை கொடுத்திருக்கிறார் பிரஷாந்த் நீல். பான் இந்தியன் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது கேஜிஎப்.

ஒரு படத்துக்கு வலுவான திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதையும் உதாரணமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். வெறும் சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல், இரண்டாம் பாதியில் அரசியல் தலையீடுகள் அதனை யஷ் எதிர்கொள்ளும்விதம் என புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

Related posts