வில்லங்கமான கேள்வியும், விளக்கமான பதிலும் – மிஷ்கின்

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மிஸ்கின் பதிலளித்துள்ளார். அதாவது மிஸ்கின் படங்களின் போஸ்டர்களில் மிஸ்கின் பெயர் மட்டும்தான் இடம்பெறுகிறது ஏன் மற்றவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான இவர், தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை டைரக்டு செய்து முன்னணி டைரக்டர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.

இப்போது, ‘பிசாசு-2’ படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா பேயாக நடிக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், ‘‘உங்கள் படங்களின் போஸ்டர்களில் மிஷ்கின் என்ற பெயரை தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறுவதில்லையே…ஏன்?’’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு மிஷ்கின், ‘‘ஒரு படத்தின் போஸ்டரை பார்க்கும்போது, அது என்ன படம்? என்றுதான் முதலில் கவனிப்பார்கள். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரையும் போடுவதற்கு போஸ்டரில் இடம் இருக்காது. டிரைலரில் கூட படத்தின் கதைக்களத்தைத்தான் எதிர்பார்ப்பார்கள். பெயர்களை அல்ல…’’ என்று பதில் அளித்தார்.

Related posts