உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 11

உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 11

கஸ்டங்களா !
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

.. நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில்

பிரவேசிக்க வேண்டும். அப்போஸ்தலர் 14: 22

பாடுகள் வரும், வரட்டும். கிறிஸ்துவைப்போல நம்மை மாற்றுகிற படிமுறைக்கு அதுவே சிறந்த வழி. எனினும் பாடுகளைக் குறித்து எவரும் உறுதியாகப் பிரசங்கிப் பதில்லை. மாறாக எங்கள் கஸ்டம் தீரும் என்றுதானே சொல்லுகிறார்கள். இது என்ன? கஸ்டம் என்பது என்ன? உபத்திரவங்கள் என்பது என்ன? என்று ஓர் தாயார் சுவிற்சலாந்து தேசத்தில் நான் இருந்தபோது கேட்ட கேள்வியினால் நானும் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நான் பிரயாணத்தில் வாசிக்கும்படியாக வைத்திருந்த சகோ. சுகரியா பூணன் அவர்களின் ”சிலுவை இல்லாத இயேசுவா ” என்ற புத்தகத்தில் அதற்கான விடையைக் கண்டுபிடித்து அவர்களை ஆறுதற்படுத்தினேன். ஆந்தப் புத்தகத்தில் இருந்த மிகத்தெளிவான விளக்கம், கஸ்டம் என்பது வேறு ! உபத்திரவம் என்பது வேறு. கஸ்டம் என்பது நமக்கு நாமே தேடிக்கொள்வது. அது சூழ்நிலைகளைச் சார்ந்தது. ” அவனவன் தன் தன் சுயஇச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு (என யாக்கோபு 1:15இல் அறியலாம்). என்பது இதுதான்.

நமக்கிருக்கும் கஸ்டங்களை சற்று சிந்தித்துப்பார்ப்போம். அதற்கு பணமோ, பதவியோ, கணவணோ, மனைவியோ, பிள்ளைகளோ உறவுகளோ காரணமாக இருப்பது தெரியவரும். சமுதாயத்திலும், தேசங்களிலும் உண்டாகும் கலவரங்கள், அழிவுகள் காரணமாக இருக்கும். தெவன் பொல்லாங்கை, தீமையை, அழிவை கட்டவிழ்த்து விடுவாரா? தீமையினால் சோதிக்கிறவரா தேவன்? இயேசு எடுத்துக்காட்டிய உவமையில் அந்த இளையவனுக்கு உணவு கிடைக்காததற்கு ஏன் கஸ்டம்? அவனால்தான் அவனுக்கு கஸ்டம் ஏற்பட்டது. இதன் மூலம் கஸ்டம் என்று நாம் சொல்பவற்றை நம்மால் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது விளங்குகிறது.

கடடுப்பாட்டோடே செலவுசெய்து பணக்கஸ்டத்தைத் தவிர்க்கலாம். நுல்லுறவை வளர்த்து அயலவனோடே பிணக்கைத் தவிர்கலாம். நம்மால் சரிசெய்ய முடிந்தவற்றை நாம் தவறவிடுவதால் ஏற்படுவதுதான் கஸ்டங்கள். இவற்றை மேற்கொள்ள வேதம் வழிகளைக் காண்பிக்கின்றது. ஆகவே, வேதத்தில் காணப்படாத கஸ்டம் என்ற வார்த்தையை, சொல்லைத் தவிர்த்து வாழ முன்வருவோமாக. தம்மையே நமக்காகத் தந்த தேவன், அன்றாட வாழ்வின் காரியங்களில் நம்மைக் கைவிடுவாரா?

நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்ப சூழ்நிலைகளைக் கையாளத் தவறு வதனாலேதான் கஸ்டங்கள் வருகின்றனவென்று சகரியா பூணன் அவர் தமது புத்தகத்தில் விளக்குகிறார். தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவோமேயானால் கஸ்டங்கள் தாமாகவே நீங்கிப்போகும். நம் வாழ்வில் ஏற்படுகிற பாதகமான சூழ்நிலைகள், இது தேவனால் அனுமதிக்கப்பட்டதா அல்லது நம்மால் ஏற்பட்ட கஸ்டங்களா என்பதைப் பகுத்தறியும் பக்குவத்திற்குள் வளரவேண்டிய அவசியம் நமக்குண்டு.

ஆகவே நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒரு காலத்திற்குள் நிற்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே தேவனிடம், எமக்கு இரங்கி எம்மை அவர் வழிகளில் நடத்திச் செல்ல கிருபை அளிக்குமாறு வேஒ;டுவோம்.

ஆன்பின் பரலோக பிதாவே, எனக்கிருக்கும் கஸ்டங்களைப் பகுத்தறியும் பக்குவத்தை எனக்குத் தந்தீர், நன்றி அப்பா. உமது வசனத்திற்குத் திரும்பி, எனக்கு ஏற்பட்டுள்ள கஸ்டங்களை நிவர்த்தி செய்ய என்னை எமது கரத்தில் தருகிறேன் பிதாவே. உமக்கு ஏற்ற பிள்ளையாக நானும் எனது குடும்பமும் வாழ வழிசெய்து வழிநடத்தும் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark

Related posts