உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 10

உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 10

தமது இரத்தத்தால் நம்மை ஒப்பரவாக்கிய தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கிபரலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்குஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலேசியர் 1:20.

இலங்கையில் இரு இனங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரிவினை; தற்போது இருதேசங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரிவினை என்னவென்று ஆராய்ந்தும் அதனைதீர்க்கக்கூடிய நிலைமைகளும் செயற்பாடுகளும் எவ்வளவு தூரம் தாமதிக்கப்படுகிறது என்பதைநாம் நன்கு அறிந்துள்ளோம். மனிதர்கள் ஆகிய நாம் பகைமைகளை மறந்து மனிதநேயத்தைவெளிப்படுத்தி அமைதியை உருவாக்க முடியவில்லை. ஆனால் பாவம் செய்து தேவமகிமையைஇழந்து தேவனுடன் உள்ள தொடர்பை இழந்து தேவனுக்கு எதிராளியாகிய எம்மை இயேசுதமது இரத்தத்தினால் எமது பாவங்களைக்கழுவி பரிசுத்தப்படுத்தி மீண்டுமாக தேவனுடன் ஓர்உன்னத தொடர்பை ஏற்படுத்தினார். இதனை நாம் மேலே வாசித்தோம். பிதாவாகிய தேவன்தமது குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி பாவநிவாரணபலியாக சிலுவை மரணத்தின் மூலம்ஒப்புக்கொடுத்து மனுக்குலத்தை பாவசாபங்களில் இருந்துமீட்டு மீண்டும் தம்முடன்(தேவனுடன்) ஒப்பரவாக்கினார்.

இதனை நாம் 2கொரிந்தியர் 5:18-19 இல் காணலாம். அவர் இயேசுகிறிஸ்து வைக்கொண்டுநம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்குஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில் தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல்கிறிஸ்துவுக்குள் அவர்களை (மனுக்குலத்தை) தமக்கு ஒப்புரவாக்கி ஒப்புரவாக்குதலின்உபதேசத்தை (ஐக்கியத்தின் உண்மையை – சத்தியத்தை) எங்களிடத்தில் ஓப்புவித்தார்.

ஒருதடவை மனிதன் இ.தளத்தில் ஓர் வேடிக்கையான ஒளிப்படத்தை பார்த்தேன். இந்தியாவில் தோசம்நீங்க மாட்டைத் திருமணம் செய்த இளைஞரைப் பற்றியது. பிதாவாகியதேவன் இயேசு மூலம் மக்களின் பாவங்களை சாபங்களை தோசங்கள நீக்கி விடுதலைதருகிறார் என்பதை இன்று அறிய மனமற்ற மக்கள் தங்களின் தோசம் நீங்க இவ்வாறுநடந்து கொள்கிறார்கள். இது எவ்வளவு வேதனைக் குரியதும் வேடிக்கையானதுமாக உள்ளது.

அதேபோல ஒரு தடவை பத்திரிகையில் வாசித்த ஓர் சம்பவமும் நினைவுக்கு வருகிறது. ஒருகுடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டையும் சமாதானமுமாக பல வருடங்கள்கழிந்தது. இதற்கிடையில் ஆறு பிள்ளைகளை பெற்றுக்கொண்டனர். திரும்பவும் பிரிவும்இணைவுமாக இருந்தனர். 7வது குழந்தையும் பிறந்தது. அப்போது ஜோதிடர்கள் உங்களுக்குநல்லகாலம் பிறந்து விட்டது என்று கூறினர். சிறிது காலத்தின் பின்னர் 7வது குழந்தைஇறந்து விட்டது. அப்போது பெற்றோர் உணர்ந்தனர் குழந்தையின் மரணத்திற்கு தாம்காரணம் என்று. பிற்பாடு இனி தாம் பிரிவதில்லை என்று உறுதிபூண்டனர். சுருங்கக்கூறின்குழந்தையின் மரணம் குடும்பத்தை சேர்த்து வைத்தது எனலாம்.

ஆனால் தேவனின் வார்த்தைக்கு செவிசாய்த்து கீழ்படியாமையால் பிரிந்துபோன மனிதனைதேவனோடு இணைக்க எந்தவொரு மனிதனாலும் முடியவில்லை. எந்த ஒரு முயற்சியும்சரிவரவில்லை. ஏன் தெரியுமா? பாவம். அது அவ்வளவு கொடியது. பாம்பைக்காட்டிலும்விசமுள்ளது. அது தேவனையும் மனிதனையும் பிரித்தது. அந்த பாவத்தினால் ஏற்பட்ட பிரிவைநீக்கிச் சரிப்படுத்தி தேவனோடு மக்களை ஒப்பரவாக்க இரத்தம் சிந்தப்பட வேண்டியிருந்தது. இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள் பாவம் எவ்வளவு கொடியது என்று.

வேதம் இவ்வாறு கூறுகிறது. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டுஇ நம்முடைய துக்கங்களைச் (கவலைகளை வேதனைகளை) சுமந்தார். நாமோ அவர் தேவனால்அடிபட்டு வாதிக்கப்பட்டு சிறுமைப் பட்டவரென்று எண்ணினோம். நம்முடையமீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் (தீமைகளுக்காக) அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் (தேவனுடன் ஐக்கியத்தைக்கொண்டுவரும்) ஆக்கினை (உத்தரவு) அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால்குணமாகிறோம் (விடுதலை அடைகிறோம்).

கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவருடையஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது அவர் தமது சந்ததியைக்கண்டு நீடித்த நாளாயிருப்பார். கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். ஏசாயா 53:4-5-10.

அருமையான அலைகள் வாசக நேயர்களே நமது பிள்ளையும் சாகவேண்டாம். நாமும்எதையும் இழக்கவும் வேண்டாம். இதோ தேவன் தமது ஒரேபேறான குமாரனின் இரத்தத்தைதாமே எமக்காக பலியாக ஒப்புக்கொடுத்து நமக்கு மன்னிப்பையும் விடுதலையையும்அளித்துள்ளார். தேவன் நமக்காக தம்மை விட்டுக் கொடுத்தார். தம்மையே கொடுத்துவிட்டார். நாமும் நம்மை தேவனுக்கு விட்டுக்கொடுப்போமா?

நாம் எம்மை விட்டுக்கொடுத்து வாழும்போது சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியு மானவரிடத்தில்திருப்பப்பட்டிருக்கிறீர்கள் (1பேதுரு 2;:25) இந்த தேவனின் பாதுகாப்பை எமது வாழ்க்கையில்அடைந்து கொள்ளலாம். அப்போது அவர் உங்களை எந்த தீமைகளும் அணுகாத வண்ணம்காத்துக் கொள்வார். இந்த அனுபவத்தை நீங்கள் உங்கள் வாழ்வில் அடைந்து கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அந்த தேவனின் விருப்பத்தை அடைந்து கொள்ளஎன்னுடன் சேர்ந்து கீழ்வரும் ஜெபத்தை தேவனிடம் ஒப்புவி.

அன்பின் பரமபிதாவே நான் நித்திய ஜீவனைப் பெறும்படியாக இயேசுவை சிலுவைமரணம்வரை ஒப்புக்கொடுத்தீரே நன்றி அப்பா. அந்த சிலுவை மரணம் உம்மைவிட்டு பிரிந்திருந்தஎன்னையும் உம்மோடு ஒப்பரவாக்கியதற்காக நன்றி. அந்த அன்பை நான் மறக்காமல் வாழவும்நன்றியுள்ள மனதுடன் எப்போதும் உம்முடன் வாழ உதவி செய்து என்னையும்என்குடும்பத்தையும் காத்து வழிநடத்தும்படியாக மண்றாடி நிற்கிறேன் பிதாவே ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark

Related posts