உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 08

மரணத்தின் பின் !
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு. அந்தப் பாதையில்
மரணம் இல்லை. நீதிமொழிகள் 12:28

மரணம் வாழ்வின் முடிவல்ல் அது இன்னொரு வாழ்வின் ஆரம்பம். இந்த வாசகத்தை எல்லா மதத்தரின் அடக்க ஆராதனையிலும் நாம் கேட்பதுண்டு. ஆனால் அந்த வாசகம் நமது வாழ்வில் எவ்வளவுதூரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அல்லது வாழ்வைக் குறித்த ஒரு பயத்தை, பொறுப்புணர்வை நமக்குள் ஊட்டி யிருக்கிறது? மரணத்தின் பின் வாழ்வுண்டு என எல்லா மதமும் நமக்கு தெரிவிக்கிறது. ஆனால் அது தேவனுடனான நித்திய வாழ்வு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த நித்திய வாழ்வுக்குள் பிரவேசிக்க இவ்வுலக வாழ்வு சீர்படுத்தப்பட வேண்டும்.

இயேசுவை அடக்கம் செய்தபோது எல்லாமே முடிந்து விட்டது என்று அவரின் சீசர்கள் நினைத்து கலங்கி ஒளித்திருந்தார்கள். ஆனால் எல்லாம் முடியவில்லை என்பது இன்று உலகறிந்த உண்மை. உண்மைதான். மரணம் வாழ்வின் முடிவல்ல. ஆனால், முடிவற்ற வாழ்வு எங்கே தொடரப்போகிறது என்பதைக் குறித்து நாம் சிரத்தை எடுப்பது மிகக் குறைவு. இன்னுமொரு வாழ்வுக்கு மரணம்தான் வாசல். ஆனால் அதன்பின் இன்னொரு வாசல் திறக்காது. ஒரே வாசல் அது நித்திய வாசல். ஆனால் அந்த நித்தியம் தேவனுடனா? அல்லது நரகத்திலா என்பதுதான் கேள்வி. ஆதை நிர்ணயிப்பது மரணம் அல்ல. நமது இவ்வுலக வாழ்வுதான் அதை நிர்ணயிக்கும் என்பதைச் சிந்திப்போமானால், இந்த வாழ்வின் அநேக பிரட்சனைகள் அடியோடு தீர்ந்துவிடும் என்பது திண்ணம். ஓவ்வொரு அடக்க ஆராதனையிலும் இக்காரியம் ஞாபகப்படுத்தப்படுமானால் உயிரோடு இருக்கும் நமக்கு எவ்வளவு நலமாக இருக்கும்.

துன் பிதாவின் சித்தத்தை செவ்வனே முடித்துவிட்டு மரண அடக்கத்தக்குள் நம்பிக்கையோடு கடந்துபோனார் கிறிஸ்து இயேசு. இன்று நம்மில் அனேகருக்கு மரணம் என்றால் ஏன் பயம்? நீ தேவனுடைய பிள்ளையானால் மரணம் என்பது பிரகாசமான ஒப்பற்ற நல்வாழ்வுக்கு உன்னை இட்டுச்செல்லும் வழியாகும். பின்னும் ஏன் பயம்? அன்பானவர்களை விட்டுப் பிரியும் பயமா? அல்லது மரிக்கும்போது வேதனையுஒ;டாகுமோ என்ற பயமா? அப்பயங்களை தேவன் பொறுப்பெடுப்பார். காரியம் அதுவல்ல. மரணத்தின் பின் நாம் எந்த வாசலுக்குள் பிரவேசிக்கிறோம் என்பது நாம் வாழ்கின்ற வாழ்விலேதான் தங்கியுள்ளது என்பதுதான் காரியம்.

நாம் இயேசுவின் வழியில் நடப்போமானால் நிச்சயமாகவே அவர் பிரவேசித்த வாசலுக்குள் பிரவேசிப்போம். இயேசு வழி எந்த வழி? அது பிதாவின் சித்தத்தின் வழி. அது சிலுவை வழி. அதை நாம் கண்டடைவது எங்கே? அதுவே அவருடைய வார்த்தை வழி. ஆந்த வழி நடப்போமானால் மரணம் நம்மை தேவனிடத்தில் கொண்டு சேர்க்கும். அந்த நிச்சயம் நமக்குண்டா?

இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் தியானிக்க தயாராகும் காலங்களில் நிற்கும் நாம். இத்தியானத்தை எமது இருதயத்தின் ஆழத்தில் பதிவிட்டு எமது வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம். உண்மையாய் அவரைத் தேடுபவர்கட்கு அவர் அருகில் இருந்து கிருபை அளிக்கிறார். நாமும் அவரைத்தேடி, அவரது சித்தம் எமது வாழ்வில் நிறைவேற எமது வாழ்வை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark

Related posts