ஜி.வி.பிரகாஷுக்குப் பட்டம் கொடுத்த சீனு ராமசாமி

ஜி.வி.பிரகாஷுக்கு 'வெற்றித் தமிழன்' என்ற பட்டம் கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி, அருள்தாஸ், தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இடிமுழக்கம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. இதன் காட்சிகள் தேனி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் (செப்டம்பர் 17) நிறைவு பெற்றது. இதனை கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு மாலை அணிவித்து அறிவித்தது படக்குழு. 'இடிமுழக்கம்' தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில், " 'இடிமுழக்கம்' படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்குச் செல்லப்போகும் மாணவனைப் போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்குத் தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி. 'இடிமுழக்கம்'…

சதீஷின் ‘நாய்சேகர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சதீஷ் நாயகனாக நடித்துள்ள 'நாய்சேகர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருபவர் சதீஷ். சில மாதங்களுக்கு முன்பு அவர் நாயகனாக நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு 'நாய்சேகர்' எனத் தலைப்பிட்டுப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இடையே, வடிவேலு - சுராஜ் இணையும் படத்துக்கு 'நாய்சேகர்' என்ற தலைப்பு வேண்டும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தலைப்பைக் கொடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. மேலும், 'நாய்சேகர்' என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது.…

எனக்கும் விஜய்க்கும் சண்டைதான்..

எனக்கும் விஜய்க்கும் சண்டைதான் என்று 'நான் கடவுள் இல்லை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 71-வது திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இதில் சமுத்திரக்கனி, சாக்‌ஷி அகர்வால், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தாணு, சேவியர் பிரிட்டோ, இயக்குநர் ராஜேஷ், இயக்குநர் பொன்.ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: "இங்கே வந்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி. இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் இங்கு வந்திருக்கிறார். அவர் ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி .எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே…

ஞானசார தேரரின் கூற்று

நாட்டில் மீண்டும் மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை தொடர்பில் விரிவானதும் முறையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கத்தோலிக்கத் திருச்சபை பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கத்தோலிக்க திருச்சபையின் தொடர்பாடல் பணிப்பாளர் சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஞானசார தேரர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் 2017ஆம் ஆண்டு தெரிவித்திருந்ததாக அவர் தற்போது தெரிவித்து வருவதாகவும் அதனை முற்றாக நிராகரிப்பதாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் நேற்று தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறா னதொரு தகவலையோ எச்சரிக்கையையோ ஞானசார தேரர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அப்போது தெரிவித்திருக்கவில்லை என்பதை சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் குறிப்பிட்டார்.