‘தலைவி’ படம் ஓ.டி.டி.யில் ரிலீசா?

சில மாநிலங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால் திரையுலகம் பாதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சில மாநிலங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால் திரையுலகம் பாதிக்கப்பட்டு உள்ளது. புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. சில படங்களை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன. இந்த நிலையில் கங்கனா ரணாவத் நடித்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதனை பட நிறுவனம் தரப்பில் மறுத்துள்ளனர். “தலைவி படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று சிலர் தவறான வதந்தி பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம்'' என்று கூறியுள்ளனர். தலைவி படம் இந்த மாதம் தமிழ், தெலுங்கு,…

நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை

நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை என்று நடிகை இலியானா கூறியுள்ளார். பல்விந்தர் சிங் இயக்கத்தில் இலியானா நடித்து வரும் படம் ‘அன்ஃபேர் அண்ட் லவ்லி’. நாட்டில் வெள்ளைத் தோல் நிறத்தின் மீதான மோகம் குறித்தும், நிறப் பாகுபாடு குறித்து இப்படம் பேசுகிறது. தற்போது ஹரியாணாவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் ரன்தீப் ஹூடா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து நடிகை இலியானா கூறியுள்ளதாவது: ''இப்படத்தின் கதை மிகவும் அழகான முறையில் எழுதப்பட்டுள்ளது. இது வெளிப்படையான முறையில் நம் முகத்துக்கு நேராகப் பிரச்சாரம் செய்யாது. மாறாக ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தைப் பேசக்கூடிய ஒரு பொழுதுபோக்குக் கதை. நாட்டில் நிறம் குறித்த தங்கள் குறுகிய பார்வையை மக்கள் விசாலமாக்கிக் கொள்ளும் வகையில் இது இருக்கும். நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை. இரவில் வானம் அழகாக இருப்பதில்லையென்றாலும்,…

வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 'விடுதலை' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'அசுரன்' படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இதுவரை சுமார் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு 'விடுதலை' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் வாத்தியாராக விஜய் சேதுபதி, கதை நாயகனாக சூரி நடிப்பதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தின் இசைக்கு முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைக் காட்சி இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர்…

இந்தியன் – 2′ விவகாரம் லைகா, இயக்குநர் ஷங்கர்

இந்தியன் - 2' படப் பிரச்சினை தொடர்பாக, தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் இயக்குநர் ஷங்கர் தரப்பினர் கலந்து பேசி, சுமுகத் தீர்வு காண, இரு தரப்பினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'இந்தியன் - 2' படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்கத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து…

2-வது டோஸ் போட்டுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக் கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை போட்டுக் கொண்டார் சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவர் தனது டுவிட்டரில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்! என கூறி உள்ளார். ------ கரோனா வைரஸுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும்…

நீதியும், உண்மையும் வெளிவரும் வரை போராட்டம் தொடரும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க இனம், மதம் அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் வருட நிறைவை நினைவு கூரும் வகையில் நேற்றைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட வழிபாடுகளும் திருப்பலியும் நடைபெற்றன. ஓமல்பே சோபித்த மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள்,பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி வணக்கத்துக்குரிய பிரையன் வுடயின்வே, அமெரிக்க தூதுவர் உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில்…

தடுப்பூசியேற்றிய மூவர் குருதி உறைவால் மரணம்

கொவிட்19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட்19 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு உயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என (27/2) கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எக்ஸ்டரா செனெகா மட்டுமல்ல எந்தவொரு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் சில ஒவ்வாமைகள் ஏற்படும். எக்ஸ்டரா செனாகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ள சம்பவங்கள் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இலங்கையிலும் அவ்வாறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தன. அதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். உலக சுகாதார ஸ்தானத்தின் பக்க விளைவுகள் தொடர்பிலான குழுவின் அறிக்கையின் பிரகாரம் இரத்த உறைவு மற்றும் தடுப்பூசிக்கிடையில் தொடர்புகள் எவையும் கண்டறியப்படவில்லையென…