அவதார் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7,500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3-ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் நடந்து வந்தன. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறுத்தினர். பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் மாதம் நியூசிலாந்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். தற்போது அவதார் 2-ம் பாகத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இதுகுறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறும்போது, “நாங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கினோம். இதனால் பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. படம் திரைக்கு வருவதும் ஒரு வருடத்துக்கு ஒத்தி…

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரி்த்து வருகிறது. சுஷாந்தின் காதலி ரியாவிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரியா உள்ளிட்ட 8 பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ-க்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:- சுஷாந்தின் உடலை மும்பை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை செய்தது. அதில் இருந்த சில குறைபாடுகளை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. என்றாலும் சுஷாந்த் மரணத்தில் விஷப் பொருளுக்கான ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. எய்ம்ஸ் அறிக்கை இறுதியானது. அதில்…

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்

அதிமுக முதல் அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அக்டோபர் 7-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிவிப்பார்கள்’, என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தனர். அவர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். தனது ஆதரவாளர்களை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து வருவதும், முதல் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில்…

முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது

முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க முடியாது. அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்ய வேண்டுமென்பதில்லை. அவ்வாறான அரசியல்வாதிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை எம்மால் புறக்கணிக்க முடியாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனைக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் எம்.பி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். ‘முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது எங்களால் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படும் ​ேபாது எங்களால் மௌனமாக வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாம் இன ஐக்கியம், நாட்டின் சமாதானம் கருதி சரியானவற்றையே செய்து வருகிறோம். தமிழ்க்…

புவி வெப்பம் அடைதலுக்கு இந்தியா தான் காரணம் – டிரம்ப் குற்றச்சாட்டு!

ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகளை அமெரிக்கா பதிவுசெய்வது குறித்த கவலைகள் குறித்து டிரம்ப் விவாதத்தின் கொரோனா இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார். "கொரோனா இறப்புகளை இந்தியா துல்லியமாக கொடுக்கவில்லை" என்று டிரம்ப் விவாத நடுவர் கிறிஸ் வாலஸிடம் பிடன் முன்னிலையில் கூறினார். விவாதம் காலநிலை மாற்றத்தை நோக்கி நகர்ந்தபோது, பிடன் தான் ஜனாதிபதியானால், அமெரிக்கா பணத்தை விவேகமான…